எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம்.அரசின் வெற்றிப் பயணம் திட்டத்தை மறுபரிசீலனை செய்யக் கோரியும் வெற்றி பயணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் உயிரிழந்தற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 1300 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தம்.
தமிழக அரசின் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் என்கிற வெற்றிப் பயணத் திட்டத்தால் ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அரசின் வெற்றி பயணத் திட்டத்தால் வாழ்வாதாரம் இழந்து சென்னையில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் வெற்றி பயண திட்டத்தை அரசு மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சீர்காழி,கொள்ளிடம், புத்தூர், வைத்தீஸ்வரன் கோவில், தென்பாதி, திருமுல்லைவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோ ஓட்டுநர்களின் திடீர் வேலை போராட்டத்தால் அந்தந்த பகுதிகளில் ஆட்டோ நிறுத்தங்களில் ஆட்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
மேலும் உடனடியாக தமிழக அரசு ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாக வெற்றி பயண திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். மழை பெய்து வரும் நிலையில் ஆட்டோக்கள் இயங்காததால் பொதுமக்கள் பாதிக்கப்படுள்ளனர்.