ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த புதுப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளியில்
முன்னாள் குடியரசு தலைவர் ஏவுகணை நாயகன் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.
இல்விழாவிற்கு பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோபிநாதன் வரவேற்றார்.
தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் ஒழுக்கத்தின் கூடிய கல்வி திறம்பட மாணவர்களுக்கு பயிற்றுவித்து ஆசிரியர்களுக்கான உயரிய விருது டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் தனஞ்செழியன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் அரசுப் பள்ளியின் சிறந்த உதாரணம் நம் முன்னாள் குடியரசுத் தலைவர் அணு விஞ்ஞானி ஏவுகணை நாயகன் அப்துல் கலாம் ஆவார்
இந்தியா வல்லரசாக வேண்டும் என கண்டவர். அது மட்டுமல்லாது மாணவர்பால் மாறாத அன்பும் பற்றும் கொண்டவர்.எத்தனை பதவிகள் வகித்தாலும் தான் பெருமையாக கருதுகிற பதவி மாணவர்களுக்கு ஆசிரியராக இருப்பதே எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்கள் கனவு காணுங்கள் அந்த கனவு பலிக்கும் வரை கனவு காணுங்கள்
என்பதை தாரக மந்திரமாக நமக்கு அளித்தவர்.அவர் பிறந்த நாளில் அவரை போல நாமும் சிறந்த சிந்தனையாளராக அறிவியல் வல்லுனராக வரவேண்டும் என்பதை மாணவர்கள் உறுதி மொழியாக ஏற்க வேண்டும் என குறிப்பிட்டார்.தொடர்ந்து மாணவர்களுக்கு பேச்சு கட்டுரை ஓவியம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக அப்துல் கலாம் அவர்களின் படம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து கொண்டு மாணவர்கள் போதை இல்லா சமுதாயம் படைப்போம் என்ற உறுதி முழக்கங்களோடு பேரணி சென்றனர்
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் கமல் பிரபாகரன் வஞ்சி வேதலட்சுமி விக்னேஷ் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.நிகழ்வின் இறுதியில் தமிழ் ஆசிரியர் தனசேகர் நன்றி கூறினார்.