மதுரையில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு வார விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் பங்குபெற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் நிஷாந்த்கிருஷ்ணா கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு அது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் கேடயங்கள், பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

அவர் பேசும் போது, தகவல் அறியும் உரிமைச் சட்டம், பொதுமக்கள் அரசு துறைகளிடமிருந்து தங்களுக்கு தேவையான தகவல்களை பெற முக்கியமான சட்டமாகும். எனவே மாணவர்கள் அதை அறிந்துகொண்டு, தங்களது உரிமைகள் மற்றும் கடமைகள் குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி அன்பழகன், அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *