தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகா மீனாட்சிபுரம் விலக்கு தர்மத்துப்பட்டி தேசிய நெடுஞ்சாலைகளில் இரு புறங்களிலும் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்னாள் இந்திய ஜனாதிபதி மறைந்த மாமேதை ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணியை மாவட்ட வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் பனை விதைகளை நடவு செய்து துவக்கி வைத்தார்

இந்தப் பணியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி நாட்டு நலப் பணிகள் திட்ட மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் ஈடுபட்டனர். இந்த நிகழ்வில் திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் என் எஸ் எஸ் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் தென் மண்டலம் முனைவர் நேருராஜன் மாவட்ட பசுமைத் தோழர் சந்திரலேகா போடி மீனாட்சிபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் யோகஸ்ரீ அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் பொட்டு முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *