கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சுகுணா சர்வதேசப் பள்ளியின் ஆண்டு விழா, காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது.“மதிப்புகளும் சாதனைப் பெருமக்களும் இணைந்த கலைப் பயணம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இதில் பள்ளியின் இயக்குனர் சாந்தினி அனீஷ் குமார் தலைமையேற்று அனைவரையும் வரவேற்று பேசினார்..

விழாவில் சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி, சுகுணா கல்விக் குழுமங்களின் தாளாளர் சுகுணா, ,இயக்குனர் ஆண்டனி ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் நந்தினி குமரன், மாணவர்களின் கல்வி வளர்ச்சி, தனித்திறன் மேம்பாடு மற்றும் ஒழுக்கநெறிகளின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.

விழாவில், டிஸ்னி கதாபாத்திரங்களின் கற்பனை உலகம், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகள், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் ஆன்மிகச் சிறப்பு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாரம்பரியக் கலைகளுடன் நவீன இசை மற்றும் நடனங்களும் இணைந்து பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்தன.

மாணவர்களின் படைப்பாற்றல், கலைத்திறன், தன்னம்பிக்கை மற்றும் குழு ஒருங்கிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் விழாவுக்கு மேலும் சிறப்புச் சேர்த்தன.கல்வியுடன் இந்திய நாட்டின் பண்பாடுகளை மாணவர்களிடம் வளர்க்கும் நோக்கில் நடைபெற்ற ஆண்டு விழா, பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *