கரூர் செய்தியாளர் மரியான் பாபு


மாவீரர் மக்கள் கழகம் இணைய தளம் துவக்கவிழா கரூர் PLA ஹாலில் நடைபெற்றது.கழக தலைவர் எம்.கே. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தலைமை செய்தி தொடர்பாளர் எடப்பாடி துரைசாமி வரவேற்றார். தலைமை ஒருங்கிணைப்பாளர்MPசதாசிவம் ,பொதுச்செயலாளர்,A சரவணன்,பொருளாளர் இருதயசாமி, துணை தலைவர் அழகரசன்,இளைஞர் அணி தலைவர் முத்து குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அ இ காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி,கொங்கு இளைஞர் பேரவை தலைவர்உ.தனியரசு,தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் KM ஷெரீப் ஆகியோர்வாழ்த்துரை வழங்கினர். முதல் நிகழ்வாக மாவீரர் மக்கள் கழகம் இணையதளம் துவங்கி வைக்கப்பட்டது.கரூர் திண்டுக்கல்,திருச்சி, கடலூர்,திண்டுக்கல், புதுக்கோட்டை,தஞ்சாவூர்,வேலூர் உள்ளிட்ட11 மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை தலைவர் எம்.கே.பாஸ்கரன் நியமனம் செய்யப்பட்டனர்.


நிகழ்வினை கரூர் மாவட்ட நிர்வாகிகள் வே.கண்ணன்,வே.
விஸ்வநாதன்,சாதிக் அலி,பெ.ரமேஷ்,அழியாபுரம் தங்கவேல், கிருஷ்ணராயபுரம் முருகன்,முத்து, மனோகரன்,நல்லதம்பி,கண்ணையன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *