புதுச்சேரி

காரைக்கால் மஸ்தான் பள்ளி வீதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் தனது 8 வயது பெண் குழந்தையை சுமார் ஒரு மணி நேரமாக காணவில்லை என்று காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து உதவி ஆய்வாளர் இளமுருகு தலைமையில் துணை உதவி ஆய்வாளர் ராஜேஷ் தலைமைக் காவலர்கள் விவேக், சுரேஷ் ஆகியோர் விரைந்து செயல்பட்டு 15 நிமிடங்களில் காணாமல் போன பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.


S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *