S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
புதுச்சேரி
காரைக்காலில் நேற்று பெய்த மழையில் காரைக்கால் மேலபுத்தமங்களம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கீழ்பாலத்தில் (சுரங்கப் பாதை) மழைநீர் தேங்கி நிற்கிறது.
தண்ணீரை வெளியேற்ற அங்கு வைக்கப்பட்டுள்ள தண்ணீர் மோட்டாரும் பழுதடைந்துள்ளதால் தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை. இதனால் தண்ணீர் தேங்கி நிற்பதால் காரைக்காலிலிருந்து அந்த கிராமத்திற்கு செல்லவும், அப்பகுதியில் உள்ள செவிலியர் பயிற்சிக் கல்லூரிக்கு மாணவியர்கள் செல்லவும் பெரிதும் சிரமத் திற்குள்ளாகியுள்ளனர்.
மாவட்ட நிர்வாகமும், ரயில்வே நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.