மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களை, மதுராந்தகம் தெற்கு ஒன்றியத் தலைவர் குன்னத்தூர் ஜா. பிரசாந்த் தலைமையில், கீழக்கண்டை ஊராட்சி தருமாபுரம் கிளைக் கழக நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இந்தச் சந்திப்பின்போது கிளைக் கழக நிர்வாகிகளான ஏ. சந்தோஷ்குமார், எஸ். பிரவின்குமார் மற்றும் பா. சஞ்சய் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் திருமதி மரகதம் குமரவேல் அவர்களுக்குச் சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.