கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் மண்டப அரங்கில், ஒக்கினாவோ கோஜூ ரியோ கராத்தே ஸ்கூல்ஸ் அசோசியேஷன் சார்பில் சர்வதேச அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
இதில் பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த கராத்தே வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.இப்போட்டிகளைத் தமிழக மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் கராத்தே சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளான அருண் பாண்டியன், தமிழரசன், கார்த்திகேயன், வெங்கடேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.போட்டிகளுக்கு ஆசிய கராத்தே கூட்டமைப்பின் நடுவரும், கோயமுத்தூர் ஸ்போர்ட்ஸ் கராத்தே ஸ்கூல்ஸ் அசோசியேஷன் பொதுச் செயலாளருமான ஏ.எஸ். ராஜா தலைமை வகித்தார்.போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அஜய் மற்றும் விஜய் செய்திருந்தனர்.
போட்டிகளுக்கு ஸ்டார் புரமோட்டர்ஸ், கே.ஆர்.பி. ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் மற்றும் பெப்ஸ் நிறுவனம் ஆகியவை ஆதரவு வழங்கின.முன்னதாக ஏ.எஸ். ராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில்,* கராத்தே பயிற்சி பெற்று வரும் மாணவ, மாணவிகள் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளவும், தங்களது திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் கோவையில் உரிய வசதிகளுடன் கூடிய உள் அரங்கம் அமைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசிடமும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரிடமும் கோரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் அண்மையில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் கராத்தே விளையாட்டு பிரிவில் கராத்தே கலந்து கொண்டு பெருமை சேர்த்த சேத்தன் பட் ,ஆலிஷா ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்…
கராத்தே உள்ளிட்ட தற்காப்புக் கலைகளில் மாணவ, மாணவிகள் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களுக்குத் தேவையான பயிற்சி வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கோவையில் கராத்தே பயிற்சிக்கான உள் அரங்கம் அமைக்கப்பட்டால், இளம் வீரர்களின் பயிற்சிக்கும் எதிர்கால வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.