துறையூர் அக்-19:
திருச்சி மாவட்டம், துறையூர் குற்றவியல் நீதிமன்றவளாகத்தில் உள்ள கூடுதல் அரசு வழக்கறிஞர் செல்லதுரையின் அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.


விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட இணைச் செயலாளர் பா.மதன், துறையூர் நகர தெற்கு கழகச் செயலாளர் தளபதி வினோத், துறையூர் தெற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் என். சுதாகர், துறையூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் எம்.எஸ்.டி. தர்மா, உப்பிலியபுரம் மத்திய ஒன்றியக் கழகச் செயலாளர் சண்முகம், உப்பிலியபுரம் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் குணசேகரன், உப்பிலியபுரம் பேரூர் கழகச் செயலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் தங்கையா குப்புசாமி வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் பலர் விழாவில் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். விழாவின் ஒரு பகுதியாகப் பூஜைகள் நடைப்பெற்றதுடன் பங்கேற்றவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *