மயிலாடுதுறை: விஜயதசமி விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை சில்வர் ஜூப்ளி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி, பள்ளியில் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, பூக்கள் மற்றும் பழங்கள் வைத்து படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பள்ளியில் புதிதாகச் சேர்க்கைக்கு வந்த குழந்தைகள் தங்களது பெற்றோருடன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு மாலை அணிவித்து, நெற்றியில் குங்குமத் திலகமிட்டு ஆசிரியர்கள் வரவேற்றனர்.

பின்னர், குழந்தைகளை ஆசிரியர்கள் மடியில் அமரவைத்து, நெல் மணிகளில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’கரத்தை எழுதச் செய்து கல்வியைத் தொடங்கி வைத்தனர். பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்று கல்விப் பயணத்தைத் தொடங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளர் மோகன்ராஜ், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *