S. செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்

புதுச்சேரி காரைக்கால், அக். 21: காரைக்கால் பாரதியார் சாலையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணி காரணமாக, நாளை (அக். 22) குறிப்பிட்ட பகுதிகளில் 2 மணி நேரம் மின்தடை ஏற்படும் என மின்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மின்துறை உதவி பொறியாளர் (நகரம்-1) வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பாரதியார் சாலையில் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றும் பணி நடைபெற உள்ளதால், நாளை வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாரதி நகர், அண்ணா நகர், மாஸ் நகர், ராஜீவ்காந்தி நகர், வயல்கரை வீதி, பைபாஸ் ரோடு, மாரியம்மன் கோவில் வீதி, தம்பி சாயபு மரைக்கார் வீதி, என்.எஸ்.ஆர். பிள்ளை வீதி, டி.கே. நகர், ஞானப்பிரகாசம் வீதி, சேத்திலால் நகர், செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் வீதி மற்றும் ஸ்டாலின் நகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

எனவே, பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய மின்சாரத் தேவைகளுக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்ளுமாறு மின்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *