புதுச்சேரி மாநிலம் காரைக்கால், அக். 22:

இந்திய அத்லெடிக்ஸ் பெடரேஷன் சார்பில், 41வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் சென்னையில் நாளை (அக். 23) தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இப்போட்டியில் பங்கேற்க காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 7 மாணவர்கள், 6 மாணவிகள் என மொத்தம் 13 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய அளவிலான இப்போட்டியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

தேசிய அளவில் நடைபெறும் இப்போட்டியில் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *