இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப் படுகிறது.அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர்.

தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *