அரியலூர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மறியல் போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்கள் மறியல் போராட்டம் அரியலூரில் நடந்தது அரியலூர் தேரடி அருகே துவங்கிய மறியல் போராட்ட பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இர மணிவேல் மாவட்ட அமைப்பாளர் கு ஆறுமுகம் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் ஏ ஐ டி யூ சி மாவட்ட பொது செயலாளர் டி தண்டபாணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் இளங்கோவன் சி ஐ டி யூ மாவட்ட செயலாளர் தோழர் துரைசாமி மணியன் செல்வராசு வரப்பிரசாதம் ஜெகநாதன் அர்ஜுனன் சுந்தரமூர்த்தி கணேசன் ஆரோக்கியசாமி ரங்கநாதன் ஆனந்தன் ராஜாராம் மொ மணி ராதாகிருஷ்ணன் து பாண்டியன் காத்தவராயன் பாலன் பரிசுத்தம் அரியலூர் மாவட்ட கோத்தாரி கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எம் ஜெகன்நாதன் உட்பட 50க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதானார்கள்
இதேபோல் ஜெயங்கொண்டத்தில் விவசாய சங்க மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமையில் நடந்த மறியல் போராட்டத்தில் 41 பேர் கைதானாக்கள் கூட்டுறவு பயிர் கடன்கள் நிபந்தனை இன்றி தள்ளுபடி செய்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும் மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள சாகுபடி பாதிப்பிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணமும் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ பத்தாயிரம் உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் காவிரியில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்து விட வேண்டும் பம்பு செட்டுகளுக்கு மின் மோட்டார் இணைப்பு கேட்டு மனு செய்த விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும் உயர்த்தப்பட்ட உர விலையை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடந்தது