கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி, ரோட்டரி கிளப் ஆஃப் இண்டஸ்ட்ரியல் சிட்டி மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் யூனிகார்ன்ஸ் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் மருத்துவமனை கலை அரங்கில் நடைபெற்றது.
முன்னதாக இரத்த்தான முகாமை, மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் மிருதுபாஷினி கோவிந்தராஜன்,நிர்வாக இயக்குனர் டாக்டர் கோவிந்தராஜன்,ஆகியோர் துவக்கி வைத்தனர்…
மருத்துவமனையின் பொது மேலாளர் ரெஜித் ராஜன்,ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,ரோட்டரி கிளப் ஆஃப் காட்டன் சிட்டி தலைவர் ராஜேஷ் கங்கானி,ரோட்டரி கிளப் ஆஃப் இண்டஸ்ட்ரியல் சிட்டி தலைவர் பிரபு சங்கர்,ரோட்டரி கிளப் ஆஃப் யூனிகார்ன் தலைவர் ராஜ்குமார் போஜன் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுனில்,டாக்டர் நித்யா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.
முகாமில் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.ரத்ததானத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இம்முகாம் மூலம், உயிர்களைக் காப்பதில் ரத்ததானத்தின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.