தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், அக்- 21. தஞ்சையில் திருமுறைகண்ட சோழன் மாமன்னன் ராஜராஜசோழனின் 1041-வது சதய விழா, குரு மகா சன்னிதானங்களின் பேரருளோடு தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி ஒதுவாமூர்த்திகள் பாதுகாப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தேவாரத்துறை மாணவர்கள் நல சங்கம் சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சியை திருக்கயிலாய பரம்பரை ராஜலிங்கம் ஆதீனம், ராஜலிங்கம் திருமடம் குரு முதல்வர் குருமகா சன்னிதானம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ ராஜலிங்கம் தேசிய பரம்மச்சாரிய சுவாமிகள் தலைமையில், திருக்கயிலாய பரம்பரை கந்தப் பரம்பரை வாரியார் சுவாமிகள் பரம்பரை வள்ளிமலை ஆதீனம் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ குரு மஹராஜ் சிவானந்த வாரியர் சுவாமிகள் தொடங்கிவைக்க. தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தேவாரத்துறை மாணவர்கள் நல சங்கம் ஓதுவா மூர்த்திகள் சேர்ந்திசை திருமுறை பாராயணம் நடைபெற்றது.

பின்னர் பத்மஸ்ரீ திருத்தணி சுவாமிநாதனின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இதையடுத்து திருக்கயிலாய பரம்பரை, கந்த பரம்பரை, வாரியார் சுவாமிகள் பரம்பரை ஸ்ரீலஸ்ரீ குரு மஹராஜ் சிவானந்த வாரியார் சுவாமிகள் வள்ளிமலை ஆதீனம் நடமாடும் திருமுறை கோயில் குறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நாட்டிய நிகழ்ச்சி, பண்ணிசை பெருமையும் நன்மையும் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அதனைத் தொடர்ந்து கயிலாய வாத்தியம் முழங்க, மங்கள வாத்தியங்களை இசைக்க அடியார் பெருமக்கள் புடைசூழ குருமகா சன்னிதானங்கள் எழுந்தருள சிவகாமி அம்மை உடனுறை நடராஜப் பெருமானின் நால்வர் பெருமக்களின் பெயர் அலங்காரத்துடன் யானையின் மேல் பன்னிரு திருமுறை வைத்து கோவிலுடன் வீதி உலா நடைபெற உள்ளது. தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடக்கிறது.

நடந்த விழாவில் ஸ்ரீலஸ்ரீ சிவலோக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ விஜய மணிவாசக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ ஆலால சுந்தரர் தம்பிரான் சுவாமிகள், தவத்திரு ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ சிவாக்கர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பலம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சிவசேனா மாநில செயல் தலைவர் சசிகுமார், தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி ஒதுவா மூர்த்திகள் பாதுகாப்பு அறக்கட்டளை, தமிழ்நாடு அரசு இசைப்பள்ளி தேவாரத்துறை மாணவர்கள் நல சங்கம் தோற்றுனர் டாக்டர் சிவநேசன், தலைவர் சண்முகப்பிரியா, துணைத் தலைவர் திருமாறன், பொருளாளர் இந்திரா காந்தி, செயலாளர் லாவண்யா, துணைச் செயலாளர் சரத்குமார் மற்றும் ஒதுவாமூர்த்திகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக வள்ளிமலை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குரு மஹராஜ் சிவானந்த வாரியார் சுவாமிகள் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தஞ்சை சீனிவாசபுரத்தில் இன்று ஒதுவா மூர்த்திகள் சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளையில் தமிழ்நாடு அரசுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறோம். அனைத்து கோவில்களிலும் தேர்ச்சி பெற்ற ஓதுவா மூர்த்திகளை உடனடியாக நியமன செய்ய வேண்டும். கோவில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று நடைமுறை இன்னும் அமலுக்கு வரவில்லை, திருவண்ணாமலை கோவிலில் அமைச்சருடன் மாற்று மதத்தை சேர்ந்தவர் அவரது அடையாளத்தோடு சென்றதை தவறாக நினைக்கவில்லை. ஏனென்றால் இறைவன் ஒருவனே. இவ்வாறு அவர் கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *