ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
இன்று(22.10.2026)வியாழக்கிழமை பொம்மிடி ரயில் நிலையத்தில் Rail Jan Samvaad என்னும் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் திரு. சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு ரயில்வே துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.மேலும் ரயில் பயணிகள் பொதுமக்கள் சார்பில் தென்னக ரயில் பயணிகள் நல சங்கம் செயலாளர் அறிவழகன், தலைவர் காமராஜ், பொருளாளர் கேசவன், தம்பிதுரை ரயில் பயணியர் சங்கம் சார்பில் தலைவர் ஜெபசிங், செயலாளர் முனிரத்தினம், பொருளாளர் வெங்கடேசன், வணிகர் சங்க தலைவர் ஆசாம் கான்,சொக்கன், நியாமத், முருகன், வென்கோபரராவ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கலந்து கொண்டதுடன் பொம்மிடியில் கோவை,மைசூர்- திருவனந்தபுரம் ஆகிய விரைவு ரயில்கள், பொம்மிடியில் நின்று செல்லவும் அரக்கோணம்- ஜோலார்பேட்டை வரை இயங்கும் மெமூ சேலம் வரை நீட்டிப்பு செய்யவும், வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் அரக்கோணம் சேலம் மெமூ ரயில் வாரத்தில் ஏழு நாட்கள் இயக்கவும் மூன்றாவது பிளாட்பாரத்தில் கழிவறை வசதி செய்து கொடுக்கவும், கண்காணிப்பு கேமரா அமைக்கவும், பாதுகாக்கப்பட்ட ஆர்.ஓ வாட்டர் வழங்கவும் கார் பார்க்கிங் வளாகம் தூய்மையாக வைத்திருக்கவும், கோரிக்கை மனு வழங்கினார்கள்.
கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட சேலம் ரயில்வே கோட்டகூடுதல் மேலாளர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.