தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் உண்டு, உறைவிட பயிற்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடங்கியது.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 140 சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர்கள் (ஆசிரியர்கள்) இதில் பங்கேற்றுள்ளனர்.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை, பள்ளிக்கல்வி துறை இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் Yagappa Heritage Resort-ல் இந்த பயிற்சி (21-ம் தேதி) தொடங்கி 23-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.தொடக்க விழாவில் திருச்சி மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். கொடைக்கானல் உதவி சுற்றுலா அலுவலர் ஆனந்தன், சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜமாணிக்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இலால்குடி மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) கணேசன், துணை ஆய்வாளர் வீரமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.திருச்சி மாவட்ட பசுமை தோழர் பாலகிருஷ்ணன் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார். அய்யம்பாளையம் அரசு மாதிரி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அன்புதாசன் நன்றி கூறினார்.

இந்த பயிற்சியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தின் தாக்கம், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள், நிலையான வளர்ச்சி குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதன் மூலம் பெறும் அறிவை மாணவர்களிடம் கொண்டு சேர்த்து, அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தலைமையில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *