சத்தியமங்கலம், சிவியர் பாளையத்தில் உள்ள சீரடி சாய்பாபா திருக்கோவிலில் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் நிர்வாகத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சீரடி சாய்பாபாவை தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.