S. செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்

நாகப்பட்டினம் மாவட்டம்:

உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான சந்தனக்கூடு ஊர்வலம் நவம்பர் 19-ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து, நவம்பர் 20-ஆம் தேதி அதிகாலை சந்தனம் பூசும் வைபவம் நடைபெற உள்ளது.

சந்தனம் பூசும் வைபவத்திற்காகத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் இலவசமாகச் சந்தனக்கட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டு விழாவிற்காக 45 கிலோ சந்தனக்கட்டைகளை இலவசமாக வழங்குவதற்கான அரசாணையை, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் வழங்கினார்.

இந்த அரசாணையை நாகூர் தர்காவின் தலைமை அறங்காவலர் ஹாஜா நஜிமுதீன் சாஹிப் மற்றும் தர்கா நிர்வாகிகளிடம் முதலமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.எம். ஷாஜகான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

கந்தூரி விழாவையொட்டி நடைபெறவுள்ள சந்தனம் பூசும் வைபவத்திற்காக அரசின் சார்பில் சந்தனக்கட்டைகள் வழங்கப்படுவது தர்கா நிர்வாகத்தினரிடமும், பக்தர்களிடமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *