அரியலூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும் ரெட் கிராஸ் அலுவல் சார் தலைவர் திருமதி மிருணாளினி தலைமையில் நடைபெற்றது
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவல் சார் துணைத் தலைவர் ராஜவேலு முன்னிலையில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் நடந்தது தேர்தல் ஆணையராக துணை தலைவர் ராஜவேலு முன்னிலையில் நடந்தது மாவட்ட கிளைக்கு 17 உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்
பிற்பகலில் ரெட் கிராஸ் மாவட்ட அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது புதிய மாவட்ட நிர்வாகிகளாக தலைவர் செ ஜெயராமன் துணைத்தலைவர் இ எழில் செயலாளர் ஆ சண்முகம் பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர் புதிய நிர்வாகிகளுக்கு ஏராளமானோர் சால்வை கைத்தறி துண்டுகள் அணிவித்து வாழ்த்து கூறினார்கள்