தேனி மாவட்டம்,கம்பம் மெட்டு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த மின் வயர்களால் விபத்து அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, மின் வயர்களை மாற்றி அமைக்கக் கோரி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி..எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ விடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. மின்வாரிய செயற்பொறியாளர், உதவி மின் பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் வியாழக்கிழமை காலை அப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, தாழ்வாகச் செல்லும் மின் வயர்களை மாற்றி அமைக்க வேண்டிய இடங்கள் குறித்து ஆய்வு செய்து கணக்கிடப்பட்டது. தொடர்ந்து, மின் வயர்களை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.