திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டமன்றக் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. அவர்களை, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்தச் சந்திப்பின்போது திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்டத் துணைச் செயலாளர் பிரியா ப.விஜயரங்கன், தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலப் பிரச்சாரச் செயலாளர் A.A.ஆறுமுகம், ஒன்றியச் செயலாளர் மெய்யூர் ந.சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகளான எம்.ரோஜா, ஆர்.செல்வி, எம்.திவ்யா, எஸ்.வினோதா, என்.சுகன்யா மற்றும் வி.பாரதி ஆகியோர் எ.வ.வேலு எம்.எல்.ஏ. அவர்களைச் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.