மதுரையில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆயுதப் படை வளாக அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதக் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியினை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ் குமார் துவக்கி வைத்தார்.
இதில் போலீசார் பயன்படுத் தும் பல்வேறு வகையான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் பார்வைக்கு வைக்கப்பட் டிருந்தன. இதில் ஏ.டி.எஸ்.பி வேணுகோபால், மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் மோகன்குமார் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த ஆயுதங்களின் பயன்பாடு, சமூகப் பாதுகாப்பை பேணுவ தற்காக போலீசார் ஆற்றிவரும் பணிகள், கடமை யின் போது உயிர் நீத்த போலீசாரின் தியாகங்கள் குறித்தும் பார்வையாளர் களுக்கு எடுத்துரைக்கப் பட்டன.
இக் கண்காட்சி யை பார்வையிட ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தந்தனர்.அவர்கள் போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்
களை ஆர்வத்துடன் பார்வை யிட்டனர். காவல்துறையின் பணிகள் மற்றும் தியாகங்களை இளைய தலை முறையினருக்கும், பொது மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது.