மதுரை: மதுரை தெற்கு மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில், ஆதித்தமிழர் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகையைப் பேரவையின் நிறுவனர் தலைவர் அதியமான் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில், ஆதித்தமிழர் பேரவையின் மாநிலத் தொண்டர் அணிச் செயலாளர் சாமிக்கண்ணு, பேரவையின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த அருந்ததியர் மக்கள் திரளாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.