சென்னை சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் வெற்றி நிச்சயம் மற்றும் நிர்மான் அமைப்புடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது.

கல்வி குழுமத்தின் நிறுவனர் டாக்டர் ச. தேவராஜ், துணை நிறுவனர் டாக்டர் டெல்ஃபின் தேவராஜ் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தனர். செயலர் டாக்டர் தே, தேவ் ஆன்ந்த் மற்றும் இணைச் செயலர் டாக்டர் ஸ்ரீதேவி தேவ் ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்நிகழ்வில் வளமான எதிர்காலத்திற்கு இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை சரியாகவும் துறைசார்ந்த புலமையோடும் எதிர்கொண்டு தற்சார்பு பொருளாதாரத்தையும் எதிகாலத்தையும் நிலைநிறுத்த வேண்டும் என்பதோடு பன்மொழிப் புலமை, விடாமுயற்சி, ஆளுமைப்பண்பு போன்றவையும் மாணவர்கள் வளர்த்துக்கொள்வதன் அவசியத்தையும் எடுத்துரைத்தனர்.

முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் வே. ராதிகா, வரவேற்புரை வழங்கினார்.

மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் சென்னையைசேர்ந்த அறுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டனர்.சென்னையின் உள்ள முன்னணி நிறுவனங்கள் வருகைபுரிந்திருந்தனர். பொறியியல், அறிவியல், வணிகவியல், உயிரியியல், மருந்தியல், கலையியல், வங்கித்துறை, தொழில்துறை போன்ற அனைத்து துறைசார் மாணவர்களும் கலந்துகொண்டு பயன்பெறும் வகையில் முகாம் அமைக்கப்பட்டிருந்தது.அன்னை வேளாங்கண்ணி கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது வெளிக்கல்லூரியிலிருந்தும் பொதுமக்கள் உள்ளிட்டோர் 1500 நபர்களுக்கு மேலாக கலந்துகொண்டனர். 800க்கும் மேற்பட்டோர் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். 400 ற்கும் மேற்பட்டோர் பணிநியமன ஆணை பெற்றனர்.

இதில் துணை முதல்வர்கள், பல்வேறு நிறுவன அதிகாரிகள், மேலாளர்கள், பிரதிநிதிகள், பயிற்சியாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் கல்லூரியின் வேலைவாய்ப்பு தொடர்பாளர் மற்றும் கணினிப் பயன்பாட்டியல் துறைத் தலைவர் முனைவர் W. மேரி மெக்டலின் வயோலா அவர்கள் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *