அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் ஆர் ராஜகோபால் தலைமை தாங்கினார் மாவட்ட துணை தலைவர் மணிமொழி அனைவரையும் வரவேற்றுப் பேசினார் மாவட்ட இணை செயலாளர்கள் என் ராஜேந்திரன் எம் பாலுசாமி கே சபாநாயகம் பொருளாளர் எஸ் சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

மாவட்டத் துணைத் தலைவர் சி கணேசன் துவக்க உரையாற்றினார் மாவட்ட துணைத்தலைவர் என் கோபு கோரிக்கை விளக்க உரையாற்றினார் டிஎன்ஜிபிஏ மாவட்ட தலைவர் துரைவேலுசாமி டி என் ஜி பி ஏ மாவட்ட துணை தலைவர் ராமசாமி டிஎன்ஜிபிஏ செயற்குழு உறுப்பினர் பி புகழேந்தி ஆர்ஓஏ மாவட்ட தலைவர் ஆர் முருகேசன் துணைத்தலைவர் டி எம் கணேசன் பாலையா முன்னாள் அலுவலக உதவியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் எம் பெரியசாமி மாவட்ட பொருளாளர் சுந்தர்ராஜன் டி என் ஆர் டி பி ஏ மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ் கபிலன் டி என் ஆர் டி ஓ ஏ மாநில செயலாளர் எம் கே ஷேக் மாவட்ட இணை செயலாளர் கே சபாநாயகம் டிஆர்டிபிஏ மாவட்ட செயலாளர் என் ராஜமோகன் நிறைவு உரையாற்றினார் மாவட்ட தணிக்கையாளர் கே சேகர் அனைவருக்கும் நன்றி கூறினார்

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை நிலுவை இனங்கள் மற்றும் புகார் மனுக்களின் மீதான விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் விசாரணை அலுவலர்களின் துறை ரீதியான விசாரணைகளை தாமதம் இன்றி அரசு நிர்ணயித்துள்ள காலவரையறைக்குள் முடித்திடல் வேண்டும் தமிழக அரசின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப தற்காலிக பணி நீக்கத்தில் இருந்தோர் ஓய்வு பெற அனுமதிக்கப்பட்டாலும் ஓய்வூதிய பயன்கள் பெறுவதில் உள்ள இடர்பாடுகளை கலைந்து விட வேண்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளர்களுக்கு உதவி பொறியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் அரசாணை நிலை எண் 417 நிதி ஊதிய பிரிவு துறை நாள் 12 11 2020ன் படி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுமதிக்கப்பட்ட அணி ஊதியத்தை கொண்டு ஒன்று 2016 பின்வரும் ஆண்டு ஊதிய உயர்வு அகவிலைப்படி பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் பயன்கள் கணக்கிடல் ஆகியவற்றிற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *