மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் சரத்குமார், தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி, செங்கல்பட்டு கிழக்கு மாவட்டச் செயலாளர் குமரவேல், மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.எஸ்.பி. ஜான் ராஜேஷ், மாவட்டப் பொருளாளர் டி. சபரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் சார்பில் டாக்டர் ஆர். இளையராஜா மற்றும் மதுராந்தகம் தெற்கு ஒன்றியத் தலைவர் குன்னத்தூர் ஜெ. பிரசாந்த் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது, செங்கல்பட்டு தெற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி ஐயப்பன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், மகேஷ், அமுல், விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *