தென்காசி அக்டோபர்-29-

தென்காசி மாவட்டம் தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகப்படியான வியாபார நிறுவனங்கள் உள்ளதாலும் இது சுற்றுலா மாவட்டம் என்பதாலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென்காசி மாவட்டத்திற்குள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. மேலும் தென்காசி மாவட்டம் அருகில் உள்ள கிராமங்களில் இருந்தும் அதிகப்படியான மக்கள் மருத்துவம் வியாபாரம் கல்வி ஆகியவற்றிற்காக தினமும் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது. போக்குவரத்து நெருக்கடி மிகுந்த பகுதியான இசட் கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனை சிக்னல் யானை பாலம் சிக்னல் நடுப்பலுக்கு சிக்னல் ஆகியவை எப்போதும் பரபரப்பிற்கு குறைவில்லாமல் போக்குவரத்து மிகுந்த பகுதியாகும் தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலிக்கு வரும் பக்தர்கள் தாங்கள் வரும் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திச் செல்வது குறிப்பிடத்தக்கது

இவற்றை சரி செய்யும் நோக்கில் தென்காசி போக்குவரத்து காவல்துறை மிக சிறப்பாக காவலர்களை நியமித்து கடினமான நிலையிலும் வெயில் மழை பாராமல் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவது உள்ளபடியே பாராட்டுக்குரியது இந்நிலையில் தென்காசி மாவட்ட போக்குவரத்து காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் பெருமாள் அவர்களின் செயல்பாடு பாராட்டுக்குரியது ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னார்வலர்கள் ஆகியோர்களை ஒருங்கிணைத்து போக்குவரத்தை சரி செய்வதில் மக்களிடம் பாராட்டுகளை பெற்றுள்ளார்

இரவு நேரங்களில் கிருஷ்ணமூர்த்தி சிக்னல் பகுதிகளில் தன்னார்வலர்கள் இரவு முழுவதும் போக்குவரத்தை சரி செய்வது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு ஏற்பட்டுள்ளது இந்த வளைவானது இசட் வடிவிலான வளைவாகும் இது மிகவும் குறுகலான பகுதி என்பதால் இரு வாகனங்கள் பயணிப்பது முடியாத நிலையில் இவர்களின் இரவு நேர போக்குவரத்து சீர் செய்யும் பணி வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்து வருகிறது

கடந்த காவல்துறை கண்காணிப்பாளர் இந்த நபர்களுக்கு பாராட்டுகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது . தென்காசி நகர் பகுதிகளை தூய்மையாக வைப்பதிலும் இவர்களின் பங்கு பாராட்டுக்குரியது சென்டர் மீடியன் பகுதிகளில் நிழல் தரும் மரங்களை நட்டு தினமும் நீரூற்றி வளர்த்தும் வருகின்றனர் மக்களுக்கு போக்குவரத்தை இடையூறு இல்லாமல் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டோடு சிறப்பாக செயல்பட்டு வரும் காவல்துறை உதவி ஆய்வாளர் பெருமாள் அவர்களை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *