தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம், குண்டடம் அருகே வேங்கிபாளையத்தில், ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு வேளாண் மாணவர்களுக்கான கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சித் திட்டத்தின் (RAWE – 2026–2027) தொடக்க விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வேளாண் மாணவர்கள் மற்றும் உள்ளூர் விவசாயிகள் கலந்து கொண்டனர். குண்டடம் B4 குழுவைச் சேர்ந்த தரண் S, கிரி R, கௌதம் S, ஹரிஷ் R, கவிப்பிரியன் JS, லோகித் P, மெய்யழகன் V, நிஷாந்த் M, ராம்கிஷோர் VM, சஞ்சீவ் RM மற்றும் விக்னேஷ் S ஆகிய 11 மாணவர்கள் இப்பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
இப்பயிற்சித் திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமப்புற விவசாயிகளுடன் மாணவர்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களின் பாரம்பரிய மற்றும் நவீன விவசாய நடைமுறைகள், பயிர் சாகுபடி முறைகள், மண்வள மேலாண்மை, நீர் மேலாண்மை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல் மேலாண்மை, நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசின் வேளாண் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக அறிந்து கொள்வதாகும்.
மேலும், விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தொழில்நுட்பத் தீர்வுகளை எடுத்துரைத்தல், வேளாண் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், புதிய சாகுபடி முறைகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு களப்பணிகளிலும் மாணவர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்தப் பயிற்சியின் மூலம் மாணவர்கள் வகுப்பறையில் கற்ற கல்வியை நேரடி கள அனுபவத்துடன் இணைத்துக் கொள்ளவும், விவசாயிகளுக்கும் வேளாண் மாணவர்களுக்கும் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும் வாய்ப்பு ஏற்படும். மேலும், எதிர்காலத்தில் திறமையான வேளாண் வல்லுநர்களை உருவாக்குவதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.