கோவை கார் டீலர்கள் சங்கத்தினர் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை மேளா, கோவை கொடிசியா மைதானத்தில் இன்று (நவம்பர் 19) தொடங்கியது. இதனை நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கார் டீலர்கள் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் துரை, கோவை ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து 6 நாட்கள் நடைபெற உள்ள இந்த விற்பனை மேளாவில், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிறிய ரக கார்கள் முதல் உயர்தர சொகுசு கார்கள் வரை பல்வேறு வகையான கார்கள் இடம்பெற்றுள்ளன.

குறைந்த விலையில் தரமான கார்களை வாங்க விரும்புவோர் ஒரே இடத்தில் பல்வேறு வகையான கார்களை நேரில் பார்வையிட்டு, தங்களது விருப்பம் மற்றும் பொருளாதார வசதிக்கு ஏற்ற கார்களைத் தேர்வு செய்து உடனடியாக வாங்கிச் செல்லும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பழைய கார்களை மாற்றிக் கொள்ள விரும்புவோருக்கு பரிமாற்ற வசதியும், கார் வாங்குவோருக்கு வாகன ஆவணங்களைச் சரிபார்த்தல் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான உதவி உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகின்றன.

இந்த விற்பனை மேளா குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், குறைந்த விலையில் தரமான பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க விரும்பும் பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கண்காட்சிக்கு நேரில் வந்து தங்களுக்குப் பிடித்த கார்களைத் தேர்வு செய்து வாங்கிச் செல்லலாம் எனத் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு: 98422 20021, 98422 57147, 98422 45759 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *