ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
இன்று (24-11-2026)காலை 11 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கொண்டகர ஹள்ளி திப்பிரெட்டி ஹள்ளி ஊராட்சி மன்ற அலுவலகங்கள் முன்பு தோழர்கள் முத்து, நடராஜ் தலைமையில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். மல்லிகா வட்ட செயலாளர் தனுஷன் வட்ட குழு உறுப்பினர் குறளரசன் ஆகியோர் உரையாற்றினர் வட்ட குழு உறுப்பினர்கள் குப்பன் மாதையன் விவேகானந்தன் கிருஷ்ணவேணி விஜி கணேசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழகஅரசிற்குகோரிக்கைகள்வைத்தனர் ஒகேனக்கல் குடிநீரை அனைத்து கிராமங்களிலும் தடை இன்றி கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும் காலிகரம்பு முதல் மிட்டாரெட்டி ஹள்ளி வரை வனச்சாலை திட்டத்தை தாமதம் இன்றி உடனடியாக நிறைவேற்றிட வேண்டும் குருமன்ஸ் பழங்குடி மக்களுக்கு நிபந்தனை இன்றி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டும். கொண்டகரஹள்ளி திப்பிரெட்டி ஹள்ளி முத்தம்பட்டி ஊராட்சிகளை பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் கடத்தூர் ஒன்றியத்தில் இணைத்திட வேண்டும். சுமார் 70 கிலோ மீட்டருக்கு மேல் மக்கள் அடிப்படை தேவைகளுக்கு அலையும் நிலையை மாற்றி பகுதி நேர R. I அலுவலகம் மற்றும் விவசாய அலுவலகத்தை ஏற்படுத்திட வேண்டும். சாலை வசதிகளை கழிவுநீர் கால்வாய் வசதியை சீர்படுத்திட வேண்டும் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் 100 நாள் வேலைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் வேலை வழங்கி முழுமையான சட்டக் கூலி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்றது. இறுதியாக வர்ஷினி நன்றி கூறினார்.