தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின் பேரில் தேனி மாவட்ட மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜி . பாலமுருகன் உத்தரவின் பேரில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகள் வணிக நிறுவனங்களுக்கு சொந்தமான கட்டடங்கள் அரசு அலுவலகங்கள் வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது

இந்த பேரணியில் புனித தெரசா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பங்கேற்று இந்த பேரணி நடைபெற்றது இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் கு. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.

பேருராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார் பேரணியில் மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மாணவ மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்


இந்த பேரணி அனுமந்தன்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி பேரூராட்சியின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக சென்று புனித தெரசா ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்
நிறைவடைந்தது இந்த விழிப்புணர்வு பேரணியை இள நிலை உதவியாளர் சுகன்யா மேற்பார்வையாளர் ராஜ்குமார் துப்பரவு ஆய்வாளர் செந்தாமரை உள்ளிட்ட பேரூராட்சி அலுவலர்கள் ஒருங்கிணைத்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *