திண்டுக்கல் அருகே சிறுமலை மலைமீது அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவிலில், மஹா கார்த்திகை திருநாளை முன்னிட்டு மாலை 6.20 மணி அளவில் மஹா கார்த்திகை தீபம் கோலாகலமாக ஏற்றப்பட்டது.கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஊர் பொதுமக்களும், பக்தகோடி மெய்யன்பர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மழை கொட்டிக் கொண்டிருந்த நிலையிலும், பக்தர்கள் “வெள்ளிமலை ஆண்டவருக்கு அரோகரா!” என்ற கோஷத்துடன், ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் கோவில் மலையில் மஹா கார்த்திகை தீபத்தை ஏற்றி வழிபட்டனர்.மலைமீது ஏற்றப்பட்ட தீப ஒளி, மழை இருட்டையும் மீறி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் பிரகாசமாக ஜொலித்தது. இதனை கண்ட பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *