திண்டுக்கல் மலைக்கோட்டை (பத்மகிரிமலை) அடிவாரத்தில் திருக்கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட ஸ்ரீ அபிராமி அம்மன் வழிபாட்டு குழு (இந்து முன்னணி) சார்பாக மாவட்ட தலைவரது தலைமையிலான அருள்மிகு அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரிஸ்வரர் அமர்ந்திருந்த பத்மகிஸ்வரர் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு, பௌர்ணமி கிரிவல உற்சவத்தில் சிறுமலை அடிவாரத்தில் உள்ள தத்வேதா ஆசிரமத்தின் பிடாதிபதி. தவத்திரு ஞான சிவனாந்தா சுவாமிகள், ஓதுவார் சிவ.சுப்ரமணிம் ஆகியோர் சிறப்பு வழிபாடு மற்றும் சொற் பொழிவுடன் கிரிவல உற்சவத்தினை துவக்கி வைத்தனர்.
இதில் ஸ்ரீ அபிராமி அம்மன் பக்தர்கள் வழிபாட்டு குழு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன், திண்டுக்கல் சிவனடியார் திருக்கூட்டத்தின் சிவ வாத்தியம் முழங்க கிரிவல பாதையில் ஸ்ரீ அபிராமி அம்மன் உடனுறை பத்மகிரிஸ்வரர் தேர் பவனியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் அவரது தலைமையிலான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.