பண்ருட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அங்குசெட்டிபாளையம், வையாபுரிப்பட்டினம், ஆண்டிகுப்பம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் 25.11.2026 அன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது குழந்தைகளுக்கு புரோட்டின் மிட்டாய் வழங்கப்படுவது, குழந்தைகளின் எடை – உயரம், வருகைப் பதிவேடு, பொருட்களின் இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் 15-வது நிதிக்குழு நிதியில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள், டயாலிசிஸ் மையம், பிரசவ வார்டு, அவசர சிகிச்சை பிரிவு ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.
ஆட்சித்தலைவர் கூறுகையில், குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடின்றி ஆரோக்கியமாக வளர முட்டை, சத்துமாவு, கொண்டைக்கடலை, ஊட்டச்சத்து பிஸ்கட், மதிய உணவு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையங்களை தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் பராமரிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு கனிவுடன் தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செல்வி, இணை இயக்குநர் நலப்பணிகள் பிரமிளா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *