தேனி மாவட்டம், போடி அருகே உள்ள போ.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு சுவர் மற்றும் சாலையோர பூங்கா. மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்படிபேரூராட்சிகளின் மண்டல உதவி இயக்குனர் ஜி பாலமுருகன் அறிவுரைகளின் படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. .

மீனாட்சிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டு.12 காந்தி மெயின் ரோடு அங்கன்வாடி முன்புறம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு விழிப்புணர்வு சுவர் மற்றும் சாலையோர பூங்கா பேரூராட்சி மன்ற தலைவர் சு. திருப்பதி துணைத்தலைவர் சி கருப்பையா ஆகியோர் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் சி யோகஸ்ரீ முன்னிலையில் உயிர்த்துளி பூங்கா திறந்து வைக்கப்பட்டது

மேலும் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு பொது மக்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியதும் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு அதற்கான துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மழை நீரை சேமித்து பயன்படுத்துவோம் நீர் வளத்தை பாதுகாப்போம் என்று மீனாட்சிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *