1949-ஆம் ஆண்டு இதே நாளில் தான் இந்திய அரசியலமைப்பு அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1950 ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

2015-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 26-ஆம் தேதி அரசியலமைப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை முன்னிட்டு டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும் இது கருதப்படுகிறது.

அதன்படி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு ஸ்ரீபெரும்புதூர் வழக்கறிஞர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

இந்நிகழ்வில் பிள்ளைப்பாக்கம் வெங்கடேசன், நரேந்தர், யோகநாதன், ஆயக்கொளத்தூர் வெங்கடேசன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *