கோவை ஆர் எஸ் புரம் கௌலி ப்ரவுன் சாலையில், அதிநவீன வசதிகளுடன் கூடிய “ஸ்க்கின்னிக் & ரீக்ரோ” எனும் முடி மற்றும் தோல் சிகிச்சைக்கான சிறப்பு க்ளீனிக் திறப்பு விழா இன்று நடந்தது. பார்க் கல்வி குழுமத்தின் சி.இ.ஒ. முனைவர். அனுஷ்யா ரவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இக்கிளீனிக்கை திறந்து வைத்து வாழ்த்தினார்.
பின்னர், முடி, தோல் சிகிச்சைக்காக அமெரிக்கா மற்றும் கொரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அதிநவீன சிக்கிச்சை இயந்திரங்களின் அறைகளுக்கு சென்று பார்வையிட்டார். இதுகுறித்து பேசிய “ஸ்க்கின்னிக் & ரீக்ரோ” சிறப்பு க்ளீனிக் மருத்துவர்கள், முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்காக அதிநவீன இயந்திரங்கள் உதவியுடன் உலகத்தரத்திலான சிகிச்சை அளிக்க இக்கிளினிக் தொடங்கியதாக தெரிவித்தனர். முடி உதிர்தல் சிகிச்சை, முடி நடுதல், முடி அகற்றுதல், முகச்சுருக்கம் நீக்கி முகப்பொலிவு பெறுதல், மச்சம் மறு ஆணி போன்றவற்றை நீக்குதல், காயத் தழும்பு மற்றும் வெள்ளை படை அறுவை சிகிச்சை, சொரியாசிஸ், படர் தாமரை சிகிச்சை, தொழுநோய் சிகிச்சை என முடி மற்றும் தோல் சம்மந்தப்பட்ட அனைத்து குறைபாடுகளுக்கும் தீர்வை தரும் வகையில் சிகிச்சை வழங்கப்படும் என தெரிவித்தனர்.
ரத்த பரிசோதனை மற்றும் ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு தகுந்தவாறு மருத்துவ குழுவினரிடன் உரிய ஆலோசனையுடன், முடி உதிர்வுக்கு ஆட்க்டிக் – டிப் ஹேர் ரெடியூசன், ஸ்கின் ரீபூட், லுமினோ கோல்டன் இன்ஃபியூசன், ப்ளாட்டினம் லுமினோ ட்ரிப் எனும் சிகிச்சைகளும், முடிக்கு ப்யூர் க்ரோன் ஆக்சிஜன் ரெடியன்ஸ், ஸ்கல்ப் எலிசிர், ரூட் ரிவீவ், ஃபாலி பூஸ்ட் உள்ளிட்ட உயரிய சிகிச்சை அளிக்கப்படும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு இனி துருக்கி போன்ற அயல்நாடுகளுக்கு சென்று சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அனைத்து உலகத்தர சிகிச்சைகளும் பொதுவான செலவை விட குறைந்த செலவில் ஸ்க்கின்னிக் & ரீக்ரோ க்ளினிக்கில் சிறப்பு சிகிச்சைகள் தரப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ப்ரான் அம்பாசட்டர் வர்ஷா பிள்ளை, மருத்துவர்கள் சித்திக், சுதர்சன், ஸ்ருதி லயா, அஃப்னா, ஸ்ரீ அகர்சன் , நீஷ்மா சிறப்பு விருந்தினர்கள் என ஏராளமானோர் இதன் திறப்பு விழாவில் பங்கேற்றனர்.