தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 77-வது உலக ஜெனிவா ஒப்பந்த நாள் விழாவை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஓவியப் போட்டிகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. வி. சிவகிருஷ்ணமூர்த்தி அவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்கள், காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் சாதனைகளை மனதாரப் பாராட்டினார்.
மேலும், மாணவிகள் கல்வியிலும், இதுபோன்ற பல்வேறு திறன் சார்ந்த போட்டிகளிலும் தொடர்ந்து சிறந்து விளங்கி, மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துத் தெரிவித்தார்.