தேனி மாவட்டம் போடி அருகே உள்ள தேவாரம் பேரூராட்சி சார்பில் பஸ் நிலையத்தில் கலைக்குழுவினர் பொதுமக்களுக்கு மழை நீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்படி தேனி மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் ஜி பாலமுருகன் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் என்.ஜ.பி. லட்சுமி பால்பாண்டி தலைமை தாங்கினார்
பேரூராட்சி செயல் அலுவலர் வி அன்பழகன் துணைத்தலைவர் எம். சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த பிரச்சாரத்தில் கலைக்குழுவினர் மழைநீர் சேகரிப்பு வாழ்வின் பாதுகாப்பு மழைநீரை சேகரித்து பயன்படுத்துவதன் மூலம் நாம் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி நீர் தட்டுப்பாட்டில் இருந்து நமது ஊரையும் இனிவரும் வருங்கால தலைமுறையையும் பாதுகாப்போம் என்பது குறித்தான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை பஸ் நிலையத்தில் குழுமியிருந்த பஸ் பயணிகள் மற்றும் பேரூராட்சி பொதுமக்கள் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.