இந்திய சமர் களம் சார்பில், முதலாவது தென்னிந்திய போர்க்கலை சாம்பியன்ஷிப் – 2026, ஊட்டி கிறிஸ்டஸ் ரெக்ஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இந்திய சமர் களம் நிறுவனத் தலைவர் பி.செந்தில்நாதன் மற்றும் தேசிய பொதுச்செயலாளர் திருமதி புவனேஸ்வரி ஆகியோரின் ஏற்பாட்டின்படி சிறப்பாக நடைபெற்றது.

தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து ஏராளமான போர்க்கலை வீரர், வீராங்கனைகள் பல்வேறு போர்க்கலை பிரிவுகளில் போட்டிகளில் கலந்து கொண்டனர். சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயது பிரிவுகளில் வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

நிகழ்ச்சிக்கு இந்திய சமர் களம் தேசிய பொதுச்செயலாளர் திருமதி எஸ்.புவனேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். ஹிந்த் பேசாத மாநிலங்களின் தில்லி மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.சீனிவாசன், மாமன்னர் மருது சகோதர்கள் வாரிசுதாரர் உயர்திரு த.இராமசாமி, இந்திய சமர் களம் நிறுவனர் மற்றும் தலைவர் உயர்திரு பி.செந்தில்நாதன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தெற்கு மண்டல செயலாளர் பேராசான் வீ.நீலமேகம், கிழக்கு மண்டல செயலாளர் ஆசான் எம்.ஜெயக்குமார், வடக்கு மண்டல செயலாளர் டாக்டர் ஏ.பி.கே.சரவணன், மேற்கு மண்டல செயலாளர் ஆசான் சி.கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியை காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம்.சுந்தரேசன் துவக்கி வைத்து பேசுகையில், பாரம்பரிய போர்க்கலைகளை இளைய தலைமுறையினர் கற்றுக் கொள்வது அவசியம் என்றும், இது உடல் ஆரோக்கியத்தோடு மன உறுதியையும், ஒழுக்கத்தையும் வளர்க்கும் என்றும் கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக ரோட்டரி கிளப் ஆஃப் ஊட்டி சென்ட்ரல் தலைவர் சஞ்சீவ் பாஃப்னா ஜி, முன்னாள் உதவி ஆளுநர் Rtn. Mphf. எம்.கிருஷ்ணராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முடிவில் இந்திய சமர் களம் துணை செயலாளர் ஆசான் கே.செங்கோட்டையன் நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்திய சமர் களம் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *