ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொ.துறிஞ்சிப்பட்டி பிலால் பள்ளிவாசல் முத்துவள்ளி (தலைவர்) மற்றும் செயலாளர் பொருளாளர் பதவியில் இருந்து வந்த நசீர்,நூர் முகமது (எ) நூரான்,அன்சர் அவர்களின் பதவிக்காலம் 3ஆண்டுகள் முடிந்து சுமார் 6 மாதங்கள் கடந்தும் தேர்தல் நடத்தப்படவில்லை இந்தப் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவது வழக்கம். எனவே புதிய தேர்தல் நடத்துவதற்காக புதிய போட்டியாளர்கள் ரசூல்,ஷாஜி அப்துல்காதர், லத்திப்.ஆகியோர் பெரும்பான்மை ஆதரவோடு இன்று மதியம் வெள்ளிக்கிழமை ஜிம்மா தொழுகைக்கு பிறகு சுமார் 2:00 மணியளவில் தேர்தல் நடைபெறுவதாக ஒரு மாதத்திற்கு முன்பு அனைவராலும் முடிவு செய்யப்பட்டது
.அதன்படி இன்று (27-11-2026)வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட வஃக்பு அலுவலர் முபாரக் அவர்கள் வருகை தந்திருந்தார்.ஆனால் முறைப்படி தேர்தல் நடத்தாமல் கையூட்டு பெற்றுக் கொண்டுதேர்தல் நடத்தாமல் சென்று விட்டார்.என்று கூறிய இஸ்லாமிய பொதுமக்கள் அனைவரும் புதிய தேர்தல் போட்டியளர்களுடன் சேர்ந்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு நல்ல முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் சரியான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் சேலத்தில் அமைந்துள்ளசூப்பிரண்ட் அலுவலகத்தை ஆண்கள் பெண்கள்.குழந்தைகள் என அனைவரும் சேர்ந்து முற்றுகையிடுவோம் என தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.