S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்

காரைக்கால்,28

குழந்தை திருமண ஒழிப்பு சர்வதேச தினத்தையொட்டி, புதுச்சேரி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் குழந்தை திருமணமில்லா காரைக்கால் மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில் மாவட்ட அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் நீதிபதி ஏ.அப்துல்கனி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் குழந்தை திருமணத்திற்கு எதிரான உறுதுமொழியை எடுத்துக் கொண்டனர்.

குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி கிருஷ்ணவேணி மற்றும் அங்கன்வாடி, மிஷன் சக்தி, குழந்தைகள் உதவி மையம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *