S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால், நவ.28 –
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் மற்றும் பணப்பலன்களை புதுச்சேரி அரசே நேரடியாக வழங்க அரசாணை வெளியிட வலியுறுத்தி காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ளாட்சி ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமையேற்க, காரைப் பிரதேச அரசு ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் ஷேக்அலாவுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஓய்வூதியதாரர்கள் சங்க செயலாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.