பெரம்பலூர் அருகே வேன் விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

பெரம்பலூர்.நவ.30. இன்று காலை சென்னை, ஆவடி ரோடு அம்பேத்கர் நகரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் சிவ கணேஷ் ஓட்டி வந்த வேன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகில் சென்று கொண்டிருந்த போது தடுப்புச் சுவரில் மோதி வேனில் பயணித்த முத்து என்பவரின் மகன் வசந்த குமார்28) சிங்காரம் என்பவரின் மனைவி சின்னம்மாள்(70) ராமலிங்கம் என்பவரின் மனைவி மல்லிகா(67) கிருஷ்ணன் என்பவரின் மனைவி மாரியாகி(57) சுந்தர் என்பவரின் மகன் முருகன்(36) தர்மலிங்கம் என்பவரின் மனைவி சுப்புலட்சுமி(56) சண்முகம் என்பவரின் மனைவி மணிமேகலை(42) வெங்கடேஷ் என்பவரின் மகன் நிஷாந்த்(13) மணி என்பவரின் மகன் கதிர்வேல்(32) கதிர்வேல் என்பவரின் மனைவி விஜயா(25) வெங்கடேஷ் என்பவரின் மனைவி பிரியா(36) சிவ கணேஷ் என்பவரின் மனைவி நதியா(33) மணி என்பவரின் மனைவி அஞ்சலம்(57) சுகுமார் என்பவரின் மனைவி மோகனா(40) சிவ கணேஷ் என்பவரின் மகன் கோகுல்(15) சிவநாதன் என்பவரின் மகன் வெங்கடேஷ்(38) விஸ்வநாதன் என்பவரின் மகன் நவீன் குமார்(33) வெங்கடேஷ் என்பவரின் மகன் தர்ஷன்(10) விஸ்வநாதன் என்பவரின் மனைவி சாவித்திரி(55)என இவர்கள் அனைவரும் விபத்தில் கை, கால்கள் மற்றும் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டு கூக்குரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெரில் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் உதவி செய்து பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கி சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்கள். இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்திற்கு உள்ளானவர்கள் அனைவரும் கரூர் மாவட்டத்தில் நடக்கும் உறவினர் திருமணத்திற்காக சென்றவர்கள் என தெரிய வந்தது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *