கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்தபொதுக்குழு கூட்டம்,வடலூர் தனியார் திருமண மஹாலில், வன்னியர் சங்கத்தலைவர்பு.தா.அருள்மொழி,தலைமையில்நடைபெற்றது,மாவட்ட செயலாளர்கள், சுரேஷ், ஜெகன்,சசிகுமார் பாண்டியன்,மாவட்டத் தலைவர்கள்
காசிலிங்கம்,செல்வராசு,கதிரவன்,ஆகியோர் முன்னிலைவகித்தனர்,கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபிநாத்,வரவேற்புரை ஆற்றினார்.பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சிறப்பு உரை ஆற்றினார்,

பாமக,மாநில செயல் தலைவர்,ஸ்ரீ காந்திராமதாஸ்
பாமகசட்டமன்ற கொறடா பா.ம.க இணைப் பொதுச்செயலாளர்அருள்,
மாநில தலைவர், மகளிர் சங்கம்,வழக்கறிஞர்சுஜாதா கருணாகரன், மற்றும்பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், பாட்டாளி தொழிற் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம். மகளிர் சங்கம், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை.உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டனர்,

நிறைவாக,பா.ம.க நகர செயலார் பூவராகவன், நன்றி கூறினார்.
கடலூர் மாவட்டம் வடலூர் தனியார் திருமண மண்டபத்தில்நடைபெற்ற கூட்டத்தில், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:-
“நான் முன்னேற பாடுபட வேண்டியுள்ளது. டிசம்பர் 12 ஆம் தேதி உரிமைகளை மீட்க போராட போகிறோம். சின்ன பிள்ளைகள் கூட 10.5 இட ஒதுக்கீடு எப்போது கிடைக்கும் கேட்கின்றனர். அதற்கு அவர்கள் தயாராகி விட்டனர். ஒரு காலத்தில் 7 நாள் ஸ்தம்பிக்க வைத்துவிட்டோம். இப்போது வெறியோடு 20 வாங்கவில்லை என்றாலும் 10.5 வாங்கிவிடுவேன் என்று சிறுவர்கள் முதல் பெரியவர்களால் வரை அதே சிந்தனையில் உள்ளனர்.

நமக்கு ஏற்பட்ட ஒரு துரதாஷ்டம், சினிமா பாட்டில் சொல்வார்கள், ‘எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான் ஆனால் எனக்கு நடந்த கொடுமை உங்களுக்கு எல்லாம் தெரியும் என் உயிர்தான் பறிக்கவில்லை, உரிமையை பறித்தான் என் வேர்வை வீணாக போய்விட கூடாது அந்த உரிமையை யாராலும் பறிக்க முடியாது சுப்ரீம் கோர்ட் போனாலும் பறிக்க முடியாது.

இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சூழ்ச்சியினாலே இவன் தலைவன் என்று சொல்லிக்கொண்டு உள்ளனர். ஒட்டுமொத்த மக்களும் இவன் சூழ்ச்சியை புரிந்துகொண்டுள்ளனர்.

எந்த நீதிமன்றம் போனாலும் ராமதால் வெள்ளுவர் என்னை ஜெயிக்க யாராலும் முடியாது உரிமையை பறிக்க எண்ணாதே உடைமையை பறித்துகொள் என்னிடம் பறித்து கொள்ள ஒன்றும் இல்லை. 46 ஆண்டு காலம் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று எம் மக்களை சந்தித்து பேசி வளர்த்த கட்சியை முழுதும் அபகரிக்க எண்ணுகிறார். இந்த உரிமையை விட்டு கொடுக்க முடியாது. அதனால் தான் நான் தலைவர் ஆனேன் என் மகளை செயல் தலைவர் ஆக்கினேன்.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டுள்ளோம் 28.05.2022 ஆம் ஆண்டு திருவேற்காட்டில் நடந்த பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உன்னுடைய பதவி காலம் முடிந்து விட்டது. இப்போது ஏமாற்றி பொய் சொல்லி தேர்தல் கமிஷனை விலைக்கு வாங்கி விட்டாய், என்னுடன் இருந்தவர்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறாய், தேர்தல் கமிஷனுக்கு உண்மையை சொன்னாலும் புரிவதில்லை, பணம் பத்தும் செய்யும் என்பார்கள்,

இது தேர்தல் கமிஷன் வரை சென்றுள்ளது. ஆனால் ஜெயிக்கப் போவது ராமதாஸ் தான். நான் கட்சி தொடங்கிய போது ஓட்டு ஒன்று போடுங்கள, ஒரு ரூபாய் நோட்டு ஒன்று கொடுங்கள் என்று கேட்டேன். எம் மக்கள் அப்படியே செய்தார்கள். அதன் மூலம் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை வென்றோம். இப்போது கூட்டணியில் வெறும் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர்.

இதற்கு காரணம் இவருடைய செயல் தான் தேர்வு தான் தலையீடு தான். இனி அப்படி நடக்காது. என் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது என் உழைப்பை யாரும் திருட முடியாது.

தேர்தல் கமிஷனில் உள்ளவர்கள் பொய் சொல்கின்றனர் நாம் சொல்லும் உண்மையை தெரிந்து கொண்டும் அதற்கான பதிலை கொடுக்க முடியவில்லை, அதில் ஒரு அதிகாரி இங்கு நேர்மை இல்லை நாணயம் இல்லை என்று சொல்கிறார். அதனால் நீங்கள் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார். இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். அது திங்கட்கிழமை எடுத்துக் கொள்வார்கள்.

என்னை வெல்ல நினைக்கிறாய் உன்னால் என்னை வெல்ல முடியுமா? நிச்சயமாக முடியாது. நான் செய்த தவறுகள் உன்னை படிக்க வைத்தது மருத்துவராக்கியது. டெல்லியில் மந்திரி ஆக்கியது. கட்சிக்கு தலைவர் ஆக்கியது. இப்படி எத்தனையோ தவறுகளை நான் செய்துள்ளேன். அதனால் இப்பொழுது நீ என்னோடு மோத நினைக்கிறாய். அது உன்னால் முடியாது.

என் மக்கள் என் பின்னாடி உள்ளார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் என் பின்னாடி உள்ளார்கள். ஏனென்றால் அவர்களுக்கு உண்மை தெரிகிறது. எனக்கு உடல்நிலை சரியில்லை என்று பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு சென்றேன். என்னை பார்ப்பதற்கு பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள், சமூகத்தை சேர்ந்தவர்கள் அனைத்து தரப்பினரும் என்னை பார்த்தனர்.

ஆனால் நீ மருத்துவரிடம் கேட்டுவிட்டு கிளம்பி விட்டாய். உன்னை பற்றி அப்போதுதான் இந்த உலகம் சரியாக புரிந்து கொண்டது. இந்த மக்களை இனி யாரும் ஏமாற்ற முடியாது என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

சினிமாவில் சொல்வது போல் உன் பாச்சா பலிக்காது அதுபோல் உன் பாச்சா பலிக்காது தேர்தல் கமிஷனில் வேண்டுமானால் வெற்றி பெறலாம் இங்கு நீதி தான் வெற்றி பெறும் நியாயம் தான் வெற்றி பெறும் என் பக்கம் நியாயம் இருக்கிறது மக்கள் என் பின்னால் இருக்கின்றனர். இந்த கட்சி இன்று மிகப்பெரிய ஆலமரமாக கட்சி வளர்ந்து இருக்கிறது அந்த மரத்தின் கிளையில் ஏறிக்கொண்டு முனைகிளையில் அமர்ந்து கொண்டு அடிக்கிலையை வெட்டுகிறார்.

நீ கீழே விழ வேண்டியதுதான் மரத்தின் ஆயிரக்கணக்கான விழுதுகள் மேலுக்காக வரும் மக்கள் அனைவரும் என் பக்கம்தான்.
உன்னுடைய அரசியல் பயணம் முடிந்து போய்விட்டது இதை வயிறு எரிந்து சொல்கிறேன் உன்னுடைய அரசியல் பயணம் முடிவடைந்துவிட்டது. இதன் பிறகுதான் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வளர்ச்சி வெற்றி வருகின்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் என்ன சொல்கின்றார்களோ அதை நான் கட்டாயம் செய்வேன் வெற்றி பெறுவேன் அதிகளவு சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்குவேன் அவர்கள் சட்டமன்றம் செல்வார்கள் சிலர் அமைச்சர்களாகவும் ஆவார்கள் இதை என்னால் செய்ய முடியும் என்றார். இதற்கு நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும் வெற்றி நம் பக்கம் நியாயம் நம் பக்கம் தர்மம் நம் பக்கம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *