கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நாளை கோலாகலமாக நடக்கிறது கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் நாளை திங்கட்கிழமை டிசம்பர் 1 12 2025 காலை 6 மணி முதல் ஏழு மணிக்குள் நடைபெற உள்ளதால் கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது
கம்பம் நகரில் நகரின் இதய பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது கம்பராய பெருமாள் காசி விஸ்வநாதர் கோயில் ஒரே வளாகத்தில் சிவனும் பெருமாளும் தனித்தனி சன்னதிகளில் இருப்பது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும் வலது கை சின்முத்துரையுடனும் இடது கையில் கம்ண்டலத்துடன் தட்சிணாமூர்த்தியின் ஆறு முகங்கள் 12 கைகளுடன் முருகனும் தெற்கு நோக்கி பைரவரும் உள்ளனர் கோவில்களில் மேற்கு தெற்கு திசை நோக்கி இருக்கும் பைரவர்கள் அதிக சக்தி கொண்டவர்கள் என புராணங்கள் கூறுகின்றன
இங்குள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் 22 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது தற்பொழுது 22 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டது கும்பாபிஷேகத்திற்கான யாக கால பூஜைகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி அனுக்ஞை விக்னேஸ்வரர் பூஜை தன பூஜை மகா கணபதி ஹோமம் கோ பூஜை நவக்கிரக ஹோமங்கள் நடந்தன நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை நான்காம் கால யாக பூஜையும் மாலை ஜந்தாம் கால யாக பூஜைகளும் நாளை டிசம்பர் 1 திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது நாளை அதிகாலை ஆறாம் கால யாக பூஜையும் 5 மணிக்கு பூர்ண ஹீதி தீபாராதனையும் நடைபெறும் இதனைத் தொடர்ந்து காலை ஐந்து முப்பது மணிக்கு கடம் புறப்பாடு ஆதி காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி அம்மன் பரிவார விமானங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும் இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு காசி விஸ்வநாதர் காசி விசாலாட்சி மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது
கும்பாபிஷேகத்திற்கேன கோவில் வளாகத்தில் மூலவர் சன்னதி தெற்கு வாசல் அருகில் காசி விஸ்வநாதருக்கு 9 குண்டங்கள் விசாலாட்சி அம்மனுக்கு 9 குண்டங்கள் விநாயகர் தட்சணாமூர்த்தி பைரவர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 8 குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளது மேற்கு பக்கம் சுவாமி அம்பாளுக்கும் கிழக்கு பக்கம் பரிவார தெய்வங்களுக்கும் யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது
பக்தர்கள் அந்த இடைவெளியில் அமர்ந்து இரண்டு யாகசாலை பூஜைகளையும் பார்த்து இறையருள் பெற்றனர் நாளை நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கம்பம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது நகரில் உள்ள அனைத்து பிரதான தெருக்களிலும் வண்ண வண்ண விளக்குகள் மாவிலை தோரணங்கள் மற்றும் பெண்கள் தங்களின் வீட்டு முன்பு வண்ண வண்ண கோலங்கள் வரைந்து கும்பாபிஷேக நாளில் சிறப்பாக அலங்கரித்துள்ளனர்